Advertisement

'ரபேல்' விமானங்கள் வாங்குவது ஏன்?

புதுடில்லி: ''நம் நாட்டுக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது. எந்த சூழ்நிலையையும் சந்திக்க, படைகள் தயாராக இருக்க வேண்டும். அதற்காகவே, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன,'' என, விமானப் படை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பி.எஸ்.தனோவா
கூறியுள்ளார்.
'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம் இருந்து, ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டுடன், 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 126 விமானங்கள் வாங்குவது தொடர்பான பேச்சு நடந்தது. ஆனால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், 36 விமானங்கள் வாங்குவதில் மோசடி நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன; இதை, மத்திய அரசு மறுத்து வருகிறது.இந்த சூழ்நிலையில், டில்லியில் நேற்று, விமானப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு நடந்தது.

இதில், நம் விமானப் படையின் தலைமை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பி.எஸ்.தனோவா பேசியதாவது: உலகில் வேறெந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு நமக்கு, இரண்டு அண்டை நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அணு ஆயுதம் உள்ள சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, நம் படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நம் விமானப் படைக்கு, தலா, 16 - 18 போர் விமானங்கள் உடைய, 'ஸ்குவாட்ரன்' எனப்படும், படைப் பிரிவுகள், 42 தேவை. ஆனால் தற்போது, 31 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ளன. இந்தப் பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும், படையை வலிமைபடுத்தவும், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களும், ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ரக ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.
இதற்கு முன்னும், இவ்வாறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்
கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    எதிர் கட்சிகள் இந்த செய்தியை படிக்கவும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement