Advertisement

எம்.பி.,க்கள் மீதான வழக்கு; சுப்ரீம் கோர்ட் கேள்விக் கணை

எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்காத, 18 மாநிலங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து, நேரடியாக கண்காணிக்க உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


'எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்' என, கடந்தாண்டு டிசம்பரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்குகளில், ஓராண்டுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்கள் அளிக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், மத்திய சட்ட அமைச்சகம் கூறியுள்ளதாவது:


டில்லியில் இரண்டு மற்றும் 10 மாநிலங்களில் தலா ஒன்று என, மொத்தம், 12 சிறப்பு
நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களுக்கு, 1,233 வழக்குகள் மாற்றப்பட்டன. அதில், 136 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன; 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.


இந்த பதிலால் திருப்தி அடையாத, நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் தகவல்கள் அளிக்கும் படி கேட்டிருந்தோம். ஆனால், 18 மாநிலங்கள் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.


இந்த நீதிமன்றத்தின் உத்தரவை, இந்த மாநிலங் கள் மதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. நாடு முழுவதும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும், சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும்.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றனவா... எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற தகவல்களை, மாநில தலைமைச் செயலர்களும், உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களும் தாக்கல் செய்ய வேண்டும். அக்., 12ம் தேதிக்குள் இந்தத் தகவல்களை அளிக்க வேண்டும்.


அதிக வழக்குகள் நிலுவையில் இருந்தால், கூடுதல் சிறப்பு நீதிமன்றங் களை அமைக்க வேண்டுமா என்பது குறித்தும் பதில் அளிக்க

வேண்டும். எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து, நேரடியாக கண்காணிக்க உள்ளோம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எங்கெங்கு அமைந்துள்ளன? மத்திய சட்ட அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது, 2,466 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இதுவரை, 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டில்லியில் இரண்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, பீஹார், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, தமிழகம், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில், தலா, ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆறு நீதிமன்றங்கள் செஷன்ஸ் நீதிமன்றங்களாகவும், ஐந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களாகவும் செயல்படும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் அதிகார நிலை குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

-- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    4 லட்சத்தி 20 ஆயிரம் கேஸ் கோர்ட்டுகளில் தேக்கம் என்று சில மாதங்கள் முன்னால் செய்தியில் வந்ததே அதை எப்போது முடிப்பதாக உத்தேசம்?????

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    அரசு திட்டங்களுக்கு தடை போடுங்க, பொனம் புதைக்க நடு இரவில் கூடுங்க, நிலக்கரி, 2ஜி, காமன்வெல்த், ஆதர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு, ஏர்செல், மேம்பாலம், தலைமை செயலகம், பூச்சி மருந்து, வீராணம், கூட்டுகுடிநீர் ஊழல், சிலைகடத்தல், இதில எல்லாம் விடுதலை பண்ணி விட்டு பேச்சை பாரு

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    லஞ்சமே வாங்காத நீதிபதிகளையே நிறுவவேண்டும் அப்போதான் நியாயம் கிட்டும் ஓகே லாயர்ஸ் எல்லாம் லையெர்ஸ்களா இருக்கும் வரை நீதி தேவதைகள் கட்டுப்பட்டேதான்இருக்கு இது சத்தியம்

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    எங்கள் குறிக்கோள் ஆன 45% கமிஷனுக்காக ஒரு நீதிமன்ற கட்டிடம் கட்டினோம். அதை சீரியசா எடுத்துகிட்டு கேள்வி கேட்டால் என்ன அர்த்தம் மைலார்ட்...???

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நீங்க சொன்னா நாங்க கேட்கணுமா...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சுப்ரீம் கோர்ட் முதலில் உச்ச நீதிமன்றங்களை கண்காணித்து லஞ்சம் ஊழல் என்ற புதருக்குள் மறைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... இரவில் திறப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற கேவலங்களின் பிறப்பிடமாக திகழும் அநீதி மன்றங்கள் என்று திருந்துமோ அன்று இந்தியாவுக்கு விடிவு காலம்...

    • Karthik - Chennai,இந்தியா

      உங்களுக்கு எதிராக நடப்பதால் உங்களின் விரக்தி கருத்து. உங்களுக்கு ஆதரவாக இருந்தால் நீங்கள் இப்படி தான் சொல்லவீர்களா

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    வரும் தேர்தல்கள்ல நோட்டாவுக்கு பதிலா சுப்ரீம் கோர்ட் ன்னு வெச்சுரலாம் பொருத்தமா இருக்கும்

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    வரும் ஆனா வராது எல்லாம் லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றியும், அமுல் படுத்தாமல் உள்ளதை போன்று தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement