Advertisement

'கரும்பு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்'

புதுடில்லி: ''கரும்பு விவசாயம் செய்வதை, விவசாயிகள் தவிர்க்க வேண்டும். அதிகமாக கரும்பு சாப்பிட்டால், நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்,'' என, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் கூறினார். நாட்டில் நடக்கும் கரும்பு விவசாயத்தில், 38 சதவீதம், உ.பி.,யில் செய்யப்படுகிறது. குறிப்பாக, பாக்பத் என்ற இடத்தில் தான், கரும்பு விவசாயம் அதிக அளவில் நடக்கிறது.
இந்நிலையில், பாக்பாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். நீங்கள், அதிக அளவில் கரும்பு உற்பத்தி செய்வதற்கு பதிலாக, வேறு பயிர்கள் அல்லது காய்கறிகள் பயிரிடுங்கள். ஏனென்றால், அதிக அளவிலான கரும்பு உற்பத்தி செய்யப்படும்போது, அது, அதிக அளவில் உண்ணப்படுகிறது. நிறைய கரும்பு சாப்பிட்டால், நீரிழிவு நோய் வரும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. உழைப்பின்மை அதிக கொழுப்பு உணவுகள் ஒரு முக்கிய காரணம். சர்க்கரை நோய் வந்தால் சர்க்கரை சாப்பிடக்கூடாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement