Advertisement

வழக்கை வாபஸ் பெற ரூ.5 கோடி பேரம்

கொச்சி: கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற, பாதிரியார் தரப்பில் இருந்து, 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 - 2016 வரை, 13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதையடுத்து, 'இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும், 19ல், நேரில் ஆஜராகும்படி, பாதிரியார் பிராங்கோவுக்கு, போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பாதிரியாரை கைது செய்வது தொடர்பாக, விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிரியார் பிராங்கோ மீதான பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற்றால், 5 கோடி ரூபாய் கொடுப்பதாக, அவரது நண்பர்கள் மூலம் பேரம் பேசப்பட்டது என, பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பிராங்கோ மீது பல்வேறு புகார்கள் கூறப்படும் நிலையில், அவர் பேரம் பேசுவதாக கூறப்படுவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivas Venkat - keeranur,இந்தியா

    முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை, நவ., 1க்கு ஒத்தி வைத்தத[1]. கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்கள் தொடங்கி பரபரப்பாக பேசப்பட்டி வழக்கு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை கற்பழித்து, கட்டாய கருக்கலைப்பு செய்ததாக கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, என்பது. ஆனால் இதன் முடிவு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியாது. அதன் இரண்டாம் பாகம் தான் இது அதற்கு ஏற்பட்ட முடிவே இதற்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement