Advertisement

தொழிற்சாலையில் தீ : 6 தொழிலாளர்கள் பலி

பிஜ்னோர்: உத்தர பிரதேச மாநிலத்தில், பெட்ரோலிய தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பிஜ்னோர் மாவட்டத்தில், பெட்ரோலிய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, கொதிகலனை பழுது பார்க்கும் பணியில், தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, திடீரென கொதிகலன் வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; காயமடைந்த இருவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காணாமல் போன தொழிலாளியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையின் உரிமையாளரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement