Advertisement

டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் ரெய்டு: ரூ.1.5 லட்சம் பறிமுதல்

வேலூர்: வேலூர் மண்டல டாஸ்மாக் மண்டல மேலாளராக இருப்பவர் சோபியா ஜோதி. இவர், வேலூர் மாவட்டத்தில் உள்ள 135 டாஸ்மாக் மேலாளர்களை அழைத்து, விநாயகர் சதுர்த்தி அன்று, ஒவ்வொரு கடையிலும் மாமூலாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை தர வேண்டும் எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக , தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். பணம் கொடுக்க விரும்பாத சிலர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்று(செப்.,12) லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • suresh kumar - Salmiyah,குவைத்

    1.35 லச்சமெல்லாம் பணமா? 1.76 லட்சம் கோடிக்கு முன்னால் தூசு

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சோபியா ஜோதி.இனி உங்களுக்கு சிறையில்தான் ஜோதி

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பெயரை பார்த்தால் கிறிஸ்தவராகத்தெரிகிறது இவருக்கு பிள்ளயார்சதுர்த்தி கலெக்ஷன் எதற்கு

    • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

      For collecting of Mamools or Bribe there is no question of christian.The money is only God for them.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement