Advertisement

விமானத்தில் கோளாறு : 172 பேர் தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து, குவைத் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட, இயந்திரக் கோளாறை, தகுந்த நேரத்தில் விமானி கண்டறிந்ததால், பயணியர், அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
குவைத் செல்லும், 'குவைத் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில், 172 பேருடன் புறப்பட்டுச் சென்றது. ஓடுபாதையில் ஓடத் துவங்கியபோது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார்; உடனடியாக, விமானத்தை நிறுத்தினார். இழுவை வண்டி உதவியுடன், விமானம், புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணியர் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.
இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகே, விமானம், குவைத் புறப்பட்டுச் செல்லும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில், இயந்திரக் கோளாறை விமானி கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 172 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement