Advertisement

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு குரு பெயர்ச்சிக்கு பின் திருமணம்

பவானிசாகர்: பவானிசாகர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., திருமணம் நேற்று நடக்கவில்லை. 'குருப்பெயர்ச்சி முடிந்து திருமணம் நடக்கும்' என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், ஈஸ்வரன், 42. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண், 1ம் தேதி, மாயமானார். அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, தீவிரமாக பெண் தேடினர். இதனால், திட்டமிட்டபடி நேற்று திருமணம் நடக்கும் என, ஒரு தரப்பினர் நம்பினர். ஆனால் நேற்று, அவரது திருமணம் நடக்கவில்லை.

பண்ணாரி அம்மன் கோவில் அலுவலக ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே பதிவு
செய்துள்ளபடி, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று காலை, மொத்தம், 28 திருமணங்கள் நடந்தன.அதில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் நடந்ததாக, ஆவணங்களில் பதிவு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.திருமணம் நிறுத்தப்பட்ட தகவல், 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. தீவிர பெண் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதியில், திருமணத்தை முடிக்க, பெண் தேடும் பணியில் ஈடுபட்டோம். பல்வேறு இடங்களில், பேச்சு நடந்தது. ஆயினும், திட்டமிட்டபடி திருமணம் நடக்கவில்லை. ஜோதிடர் அறிவுரைப்படி, குருப்பெயர்ச்சி முடிந்து, திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • narayanan iyer - chennai,இந்தியா

  வேண்டாமே திருமணம் . தொல்திருமால்வளவன் மாதிரி இருந்துவிடுகள் . எம் எல் ஏ வாக ஐந்து வருடம் இருந்தால் போதும் ,வாழ்நாள் முழுவதும் பென்ஷன் உண்டு . அதுவே போதும் வாழ்க்கையை தொடர. பெண் வந்தால், பண பற்றாக்குறை வரும் அவளுக்காக உழைக்கவேண்டும் தேவையற்ற முறைகேடுகளில் ஈடுபட வேண்டும் .ஆகவே தனி மரமாக இருந்துவிடுங்கள் . எம் ஜி ஆர் / ஜெயலலிதா -தலைவர்களைப் பின் பற்றி வாழ்வதாக சொல்லிவிடலாம் . முடிந்தது .

  • K Sridharan - Chennai,இந்தியா

   நாராயணன், ஆனாலும் உமக்கு இவ்வளோ குசும்பு கூடாது.

 • Kailash - Chennai,இந்தியா

  பெண்ணின் அப்பன்கள் விபரமானவர்கள் MLA ஆக இருந்தாலும் அதிமுக நிலைமை தெரிந்துவிட்டதால் பெண் கொடுக்க மாட்டேன்கிறார்கள்... நிரந்திர வருமானமும் சொந்த வீடும் என்றும் இருக்க வேண்டுமே... பெண்ணை படிக்க வைப்பார்கள் வேலைக்கு அனுப்புவார்கள் ஆனால் சொத்துக்கள் வாங்கி வாழ்நாள் முழுக்க கடனும் டென்ஷனும் கொடுப்பார்களா தேவையா? இதெல்லாம் வைத்திருக்கும் அல்லது வாழ்நாள் முழுவதும் கடனாளியாக்க ஒரு முட்டாள்ப்பயல் தேவை இந்த MLA வை கட்டிக்கொண்டால் பிறகு வரும் ரைடு... சிபிஐ.. ஆட்சி வேறு தொங்கி கொண்டு உள்ளது இவர்களுக்கு வேறு எவனாவது கிடைக்க மாட்டேன்கிறார்கள்...

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  அரை கிழவன் தன் வயதில் பாதி உள்ள பெண்ணை திருமணம் செய்யப்போகிறான் காரி துப்புவதை விட்டு போட்டோ வேறு போட்டு. வெட்கக்கேடு.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  போட்டோ இருவது வருசத்துக்கு முந்தி எடுத்து.. இது எத்தனையாவது கல்யாணம்ன்னா சொல்ல மாட்டேங்குறாய்ங்க..

 • kalyanasundaram - ottawa,கனடா

  MORE INCOME WHEN MARRIED AS A MLA OTHERWISE FEW MAY HAVE DINNER / BREAK FAST / LIQUOR BIRYANI ETC ETC AND ESCAPE WITHOUT PAYING THE ANTICIPATED AMOUNT

  • Karthik - Chennai,இந்தியா

   what is your problem. Better consult a doctor. this will happen in all parties including your supporting party.

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  எந் எ குறு பெயர்ச்சி ஏஞ்சலும் இறைவன் என்ன நாடினானோ அது தன நடக்கும் என நம்பிக்கை வேண்டும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  எப்படியும் பதவிப்போகுமுன் திருமணம் நடந்தா சரிதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement