Advertisement

அறிவியல் ஆயிரம்

மூஞ்சுறு காரணப்பெயர்




சுண்டெலி, வெள்ளெலி, கல்லெலி, சரவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் உள்ள பல வகைகளில் விநாயகரின் வாகனமான மூஞ்சுறுவும் ஒன்று. ஐரோப்பா மூஞ்சூறு, அந்தமான் மூஞ்சூறு, குள்ள மூஞ்சூறு, நாட்டு மூஞ்சூறு என பல வகை உள்ளன. இவை மக்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் யாரும் கொல்வது இல்லை. இதன் தலை, மற்ற எலிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும். மூஞ்சி நீண்ட சிறு விலங்கு என்பதால் மூஞ்சுறு ஆனது. வாய்ப்புறம் கூம்பு வடிவத்தில் இருக்கும். இடையூறு ஏற்படும்போது இவை கீச், கீச் என ஒலி எழுப்பும்.



தகவல் சுரங்கம்




மோதகத்தால் 'மொழி அறிவு'




கொழுக்கட்டைக்கு சமஸ்கிருதத்தில் மோதகம் என பெயர். இது சாலி வாகன ராஜாவுக்கு சமஸ்கிருதம் மீது பற்றை ஏற்படுத்தியது. மன்னன், மனைவியுடன் குளத்தில் நீராடினார். அப்போது அன்பின் மிகுதியால் தண்ணீரை வாரி இறைத்தார். அறிவாளியான மனைவி 'மோதகம்' என்றாள். மோதகம் என்றால் மாஉதகம். 'மா' என்றால் 'கூடாது'. தண்ணீரை வாரி இறைக்க வேண்டாம் என கூறினாள். மன்னனோ, மனைவி மோதகம் கேட்கிறாள் என நினைத்து, மோதகம் (கொழுக்கட்டை) கொண்டு வர ஆணையிட்டார். பின் அறியாமையை உணர்ந்து, சமஸ்கிருத மொழியை கற்று பண்டிதரானார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement