Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., ஒரு சந்தர்ப்பவாத கட்சி. எந்த நிலையிலும், பச்சோந்தியை போல் நிறத்தை மாற்றிக் கொள்ளும். தற்போது, காங்கிரசுடன் இருக்கிறது; நாளைக்கு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கலாம்.


டவுட் தனபாலு: உண்மையிலேயே நீங்க, தி.மு.க.,வை தான் விமர்சிக்குறீங்களா... இல்லை, 'தி.மு.க.,வுக்கு, பா.ஜ., கொஞ்சமும் சளைத்தது இல்லை... இன்று கடுமையாக விமர்சிக்கும் அவர்கள், தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்க தயங்க மாட்டாங்க'ன்னு, பொடி வைத்துப் பேசுறீங்களா என்ற, 'டவுட்' வருதே...!


---


முதல்வர் பழனிசாமி: கடந்த கால, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இனி, அவை வெளியே வரும்.


டவுட் தனபாலு: 'அடுக்கடுக்கா குற்றச்சாட்டுகளைக் கூறித்தானே, 2011ல் ஆட்சிக்கு வந்தீங்க... அப்புறம் ஏன், அதை நிரூபிக்க, எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தீங்க... இப்போ, உங்க ஆட்சி மீது, தி.மு.க., குற்றஞ்சாட்டுவதால், பதிலுக்கு நீங்களும் தயாராகுறீங்களே... இது, அரசியலா, ஒப்பந்தமான்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!


---


காங்., தலைவர் ராகுல்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலை, பாலியல் பலாத்காரங்கள், ரபேல் ஒப்பந்தம் என, எதற்கும் பதில் அளிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது, ஆச்சரியமாக உள்ளது.


டவுட் தனபாலு: பிரதமர் பேசாதது குறித்து, நீங்க ஆச்சரியப்படுவது தான், எங்களுக்கு ஆச்சரியமா இருக்கு... காங்., ஆட்சியில், நாளொரு பிரச்னை, வாரம் ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உடனுக்குடன் பதில் அளித்த மாதிரி, கொதிக்குறீங்களே... 'அமைச்சர்களின் விளக்கத்தையே உங்களால சமாளிக்க முடியலை... இதுல, பிரதமர் வேற பேசணுமா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement