Advertisement

அக்கம் பக்கம்

பகல் கனவு!




'முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, கமல் நாத்துக்கு, ரொம்பத் தான் ஆசை' என, மத்திய பிரதேச மாநில வாக்காளர்கள் முணுமுணுக்க துவங்கியுள்ளனர்.


முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யில், இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளாக, இங்கு, பா.ஜ., ஆட்சி தான் நடக்கிறது. 'இந்த முறை, எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும்' என்ற முடிவுடன், காங்கிரஸ் தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர்.


ம.பி., மாநில காங்கிரஸ் தலைவரான கமல் நாத், சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், அங்குள்ள ஒரு நகரத்தில், பிரசாரம் செய்தார், கமல் நாத். அவர் பிரசாரம் செய்த இடத்துக்கு அருகில், பா.ஜ., அலுவலகம் இருந்தது. அங்கிருந்த நிர்வாகிகள் சிலர், மொட்டை மாடியில் நின்று, கமல் நாத் பேசியதை கேட்டனர். இதைப் பார்த்த கமல் நாத், 'பா.ஜ., தொண்டர்களே, இந்த முறை, காங்கிரசுக்கு ஓட்டளிக்க முடிவு செய்து விட்டனர்' என, கிண்டலடித்தார்.


செல்லுமிடமெல்லாம், கூட்டம் கூடுவதால், 'அடுத்த முதல்வர் நான் தான்' என, கட்சிக்காரர்களிடம் நம்பிக்கையுடன் கூறி வருகிறார், கமல் நாத். காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'திக் விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா போன்ற தலைவர்கள், முதல்வர் வேட்பாளர் ரேசில் உள்ளனர். அதற்குள், கமல் நாத், பகல் கனவு காண்பதை நினைத்தால், சிரிப்பு வருகிறது' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement