Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் “பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்தப்படுவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் வி.கே.ராவ் கொண்ட அமர்வு, 'பெட்ரோல், டீசல் மீதான விலை நிர்ணயம் மத்திய அரசின் கொள்கை ரீதியிலான முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்க முடியாது. அதனால், இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    என்னது அப்போ மக்கள் கஷ்டப்படுறதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா நாட்டில் நியாயத்தை பரிபாலிக்க ஏதேனும் நடவடிக்கை எடுப்பீங்கன்னுநினச்சா நீங்களும் கைவிடறீங்களே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement