Advertisement

கரும்பு பயிரிட வேண்டாம்: யோகி அறிவுரை

லக்னோ: கரும்பு நடவு செய்வதற்கு பதில் வேறு பயிர்கள் குறித்து விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் எனஉ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: விவசாயிகள் கரும்பு பியிரிடுவதை விட்டுவிட்டுவேறு பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவு கரும்பு பயிரிடுவதால், அதனை அதிகளவு சாப்பிட வேண்டியுள்ளது. இதனால், சர்க்கரை நோய் வருகிறது.
கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தொகையினை அக்.,15க்குள் வழங்க வேண்டும். தவறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    விவசாயிகளின் நண்பனாக, விவசாயிகளுக்கு ஆலோசகராக ஆட்சியாளர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ...

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    சேம் சைடு கோல் அடித்துவிட்டார் யோகி . உ பி யில்தான் தொடங்கும் சரிவு எல்லாம் 2019.ல் சரியாகிவிடும் . இந்த சாமி மாதிரி இரண்டு பேர் பாரத் மாதாகி ஜெ என்று சொல்வார்கள்

  • Anandan - chennai,இந்தியா

    //கரும்பு பயிரிட வேண்டாம்: யோகி அறிவுரை// இதை செய்தால் நமக்கு தண்ணீர் பலமடங்கு மிச்சம்.

  • Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    சர்க்கரை நோய்க்கும் கரும்புக்கும் என்ன சம்பந்தம்... ? அதை பற்றிய அறிவு இன்னும் இல்லாமல் இருப்பது நல்லதல்ல.. சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு குறைவு... அதிக அளவு கார்போஹைட்ரெட் உடலில் இருந்தால் அது சர்க்கரையாக நொதித்தல் மூலம் மாறி, ரத்தத்தில் கரைந்து காணப்படுகிறது.. 1 . கார்போஹைட்ரெட் உணவுகளை குறைக்க வேண்டும். 2 . அல்லது உடலில் உள்ள கார்போஹைட்ரெட் கலோரி அளவை குறைக்க தகுந்த உடல் உழைப்பு வேண்டும்.. இந்த நவீன காலத்தில் எல்லாமே எந்திரங்கள் மூலமாக வேலை செய்கிறோம்.. அதுவே உடல் உழைப்பு இல்லாததற்கு மூல காரணம்...

  • Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    கார்பொரேட் சதிக்கு, ஆதரவாக செயல்படுகிறார்..

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பணப்பயிரை அவ்வளவு எளிதில் கைவிடுவார்களா

  • Indhiyan - Chennai,இந்தியா

    சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது அறியாதவர்கள் பேசும் பேச்சு. டயாபடீஸ் வந்தவர்களுக்கு மாவு சத்து [கார்போஹைட்ரெட்] தான் பிரச்சினை. மாவு சத்து, அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றில் அதிகம். சர்க்கரையை போடாமல் காபி சாப்பிட்டு விட்டு அரிசி சோறு ஒரு கட்டு கட்டினால் சர்க்கரை அளவு எகிறும். எனவே கரும்புக்கும் அரிசி/கோதுமைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    உண்மையில் கரும்பு அதிக நீர்தேவையுள்ள பயிர். நமக்கு தேவையற்றது. பனைவெல்லம் கருப்பட்டிக்கு ஆதரவளிப்போம்.கரும்புக்குப்பதில் சிறுதானியம் போன்றவற்றில் கவனம்   செலுத்தலாம். இயற்கை எரிபொருளுக்கு மெத்தனாலைவிட  ஜட்ரோப்பாவே மேல்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement