Advertisement

ஆவடி பகுதிகளில் பாலியல் வன்முறை : இரண்டு மாதங்களில் 12 சிறுமியர் பாதிப்பு

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டு மாதங்களில், 12 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருநின்றவூர், செந்நீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 56 நாட்களில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், ஜுலை, 8ல் இருந்து, எட்டு வாரத்திற்குள், மூன்று வயது முதல், 14 வயது வரை உள்ள, 12 பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த, இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான இந்த வன்முறை சம்பவங்களில் கைதானவர்கள், பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால், பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், வக்கிர மனிதர்களால், ஆவடி மகளிர் போலீசாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில் கூறியதாவது:
ஒரு குடும்பத்தில், தந்தை, தாய் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த மாதிரியான சூழலில், தாத்தா, பாட்டியிடம் குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். அவர்கள் இல்லாத பட்சத்தில், குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்கின்றனர். பெற்றோர், அவரவர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும், என்ன நடந்தது என, குழந்தைகளிடம் பொறுமையாக கேட்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட
முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

-- நமது நிருபர் --
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement