Advertisement

தமிழகத்தில் மின்வெட்டு:அமைச்சர் விளக்கம்

சென்னை: அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிச்சயமாக மின்வெட்டு இல்லை. எந்த காலத்திலும் ஏற்படாது. காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டதால் ஒரிரு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. சென்னையில் 5 நிமிடம் மின்வெட்டு இருந்தால் நான் பொறுப்பேற்கிறேன். மின்துறையில் ஊழல் என்றால், எந்த விசாரணையையும் சந்திக்க தயார். மின்துறையில் எந்தவித அரசியல் தலையீடு இல்லாமல் பணியிட மாறுதல் நடக்கிறது. சாமானியரின் சிறப்பான ஆட்சியை ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. யாரோ எழுதி கொடுத்த அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மின்வெட்டு என்பதை கண்டுபிடித்ததே திமுக தான். திமுக ஆட்சியில் 18 மணி நேர மின்வெட்டு இருந்தது. மின்வெட்டு இருந்ததை அப்போது அமைச்சராக இருந்தவர் ஒப்பு கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ரெண்டு ஆட்சியிலேயும் மாறி மாறி மின்வெட்டு மின் பராமரிப்பு மின்தடை அப்படீன்னு சொல்லி சொல்லி யு .பி.எஸ் கம்பெனிக்காரங்களை கோடீஸ்வரராக்கிய பெருமை உங்களையே சாரும் ஐயா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement