Advertisement

ஐந்து வயது சிறுமி சாய் ஸ்ரீயின் ஒவிய கண்காட்சி


சென்னையில் நாளை ஐந்து வயது சிறுமி சாய்ஸ்ரீயின் ஒவிய கண்காட்சி நடைபெறுகிறது.

சாய்ஸ்ரீ சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் வித்யோதயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் இவரது மாமா வாகை தர்மா ஒரு பிரபலமான ஒவியர்.

சாய்ஸ்ரீ பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பாகவே மாமாவின் ஒவிய கூடத்திற்கு சென்றவர், இவர் பள்ளிக்கு சென்ற பிறகும் ஒவியக்கூடம்தான் இவரது பொழுபோக்கு, விளயைாட்டுக்கூடம் எல்லாமே.

மூன்று வயது இருக்கும் போதே ஒவியங்களுக்கு வண்ணம் தீட்ட ஆரம்பித்தவர் பிறகு ஒவியங்களை வரையவும் ஆரம்பித்தார்.இவரது ஒவியத்திறைமைப் பார்த்து மாமா அப்பா அம்மா என அனைவரும் கொடுத்த ஊக்கம் காரணமாக ஒவியங்கள் வரைவதில் அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பி்த்தார்.

இதுவரை இவர் ஐம்பது படங்கள் வரைந்துவிட்டார்,வரைந்த படங்களுக்கான விளக்கங்களும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார், இதன் காரணமாக ஒவியர் வாகைதர்மா அமைத்துள்ள ஒவியகூடத்தில் முதல் ஒவிய கண்காட்சியாக சாய்ஸ்ரீயின் ஒவிய கண்காட்சியை வைக்க முடிவு செய்துள்ளார்.

நாளை 13ந்தேதி துவங்கி 20ந்தேதி வரை கண்காட்சி நடைபெறும்.கண்காட்சி சென்ன சூளைமேடு பஜனை கோயில் தெருவி்ல் உள்ள தர்ஷினி கலைக்கூடம் பிங்கர்ஸ் கேலரியில் நடைபெற உள்ளது.கண்காட்சியினை பிரபல ஒவியர் ஜெயராஜ் துவக்கிவைக்கிறார்,தமிழ்நாடு ஒவியர்கள் சங்க தலைவர் அண்ணாபிள்ளை தலைமை தாங்குகிறார்.ஒவிய கண்காட்சி பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ள வாகை தர்மாவினை தொடர்பு கொள்ளவும் எண்:9710303030.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement