Advertisement

போலீசாரை சுட்டுவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகள்

ஜம்மு : காஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிலர் சோதனைச் சாவடியில் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு, லாரி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.



தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஒரு ஏகே ரக 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக லாரி டிரைவர் மற்றும் உதவியாளரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



இந்த லாரியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பயணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தலையை விட்டுவிட்டு வாலை பிடிக்க முயற்சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement