Advertisement

அரசு பஸ் மோதி ஆசிரியர் பயிற்றுனர் பலி

செங்கம்: அரசு பஸ் மோதி, ஆசிரியர் பயிற்றுனர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில், ஆசிரியர் பயிற்றுனராக பணிபுரிந்து வந்தவர் ராமன், 40. இவர், நேற்று முன்தினம் இரவு செங்கத்தில் இருந்து, டி.வி.எஸ்., பைக்கில் ஊத்தங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, திருவண்ணாமலை - புதுச்சேரி சாலையில், பக்கிரிபாளையம் அருகே சென்றபோது, தர்மபுரியில் இருந்து செங்கத்தை நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement