Advertisement

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரசவம்: டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு

திருவண்ணாமலை: மரபணு கோளாறால், உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, முதல் முறையாக பிரசவம் பார்த்து, திருவண்ணாமலை அரசு மருத்துமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கொழுந்தப்பட்டு அடுத்த, குப்பந்தாங்கலை சேர்ந்தவர் மாரியப்பன், 32. இவர் மனைவி உமா மகேஸ்வரி, 29, 'அக்னொட்ரோபில்சியா' எனப்படும் மரபணு கோளாறால், எலும்பு வளர்ச்சியின்றி, உயரம் குறைந்து பிறந்தவர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், பிரசவத்தின் போது, தாய், சேய் இருவரில் ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும். இந்நிலையில், கருவுற்ற உமாமகேஸ்வரி, மூச்சு திணறலால் கடந்த, ஆக., 20ல், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் பரிசோதனைக்குப் பின், கடந்த, 4ல், மயக்கமருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை மூலம், 2.3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். முதன் முறையாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயரம் குறைந்த பெண்ணுக்கு (110 செ.மீ.,) பிரசவம் பார்த்து, டாக்டர்கள் சாதனை படைத்தனர். மருத்துவக் குழுவினரை, கலெக்டர் கந்தசாமி பாராட்டினார். குழந்தைக்கு, அருண்சுந்தர் என பெயர் சூட்டி, உமாமகேஸ்வரிக்கு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான, ஆணையை கலெக்டர் வழங்கினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement