Advertisement

வேலூர் சிறையில் 'புல்லட்' நாகராஜ் அடைப்பு

வேலூர்: கலெக்டர், போலீசாருக்கு மிரட்டல் விடுத்த, ரவுடி 'புல்லட்' நாகராஜ், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான். தேனி கலெக்டர் மற்றும் மதுரை, பெரியகுளம் போலீஸ் அதிகாரிகளுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் கொலை மிரட்டல் விடுத்த, ரவுடி புல்லட் நாகராஜன், 52, என்பவனை பெரியகுளத்தில் நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். அவனை, வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நேற்றிரவு, 7:00 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் மத்திய சிறையில், அவன் அடைக்கப்பட்டான். அப்போது, கைதிகள் உடையை அணிய மறுத்து, அடம்பிடித்த அவனை, கட்டாயப்படுத்தி, சிறைக்காவலர்கள் உடையை அணிய வைத்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement