Advertisement

ராகிங் செய்த கல்லூரி மாணவர்கள் 6 பேர் விடுதியில் இருந்து நீக்கம்

வேலூர்: ராகிங் செய்த கல்லூரி மாணவர்கள், ஆறு பேர் விடுதியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வேலூர், தொரப்பாடியில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை, மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர், நிர்வாணமாக நிற்க வைத்து, நடனமாட செய்து அதை மொபைலில் படம் எடுத்து, ராகிங் செய்ததாக புகார் வந்தது. கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில், அது உண்மை என்றும், ராகிங் செய்த மாணவர்கள், வேலூர் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, ராகிங் செய்த மாணவர்கள் அஜித், 19, சுரேஷ், 19, கிரண், 19, விக்னேஷ், 19, படையப்பா, 19, மணிகண்டன், 19, ஆகியோரை, 12 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இந்நிலையில், விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டதாலும், பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இவர்களுக்கும் மோதல் நடக்க வாய்ப்புள்ளதாலும், இவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்தும், விடுதியில் நுழையவும் தடை விதித்து, வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, ஆறு மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ராகிங் செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பாகாயம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement