Advertisement

யானை விரட்டிச் சென்று தாக்கியதில் 4 பேர் படுகாயம்

குடியாத்தம்: ஒற்றை யானை விரட்டிச் சென்று தாக்கியதில், நான்கு பேர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்த்தானாவை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி, 55, குப்புசாமி, 45, தங்கவேலு, 50, கஜேந்திரன், 50. இவர்கள், மோர்த்தானா அணையில் மீன் பிடிக்க நேற்று காலை, 6:00 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை, இவர்களை விரட்டிச் சென்று தும்பிக்கையால் தாக்கியது. இதில் படுகாயமடைந்து, கீழே விழுந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடியாத்தம் வனத்துறையினர், ஒற்றை காட்டு யானையை விரட்டியடித்தனர். யானையால், நான்கு பேர் தாக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement