Advertisement

பெட்ரோல் விலை உயர்வு: ரிக் உரிமையாளர்கள் தீர்மானம்

கிருஷ்ணகிரி: 'பெட்ரோல், டீசல் விலையை இரண்டு மாதத்துக்கு, ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும்' என்று, ரிக் உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் போர்வெல் ஏஜென்சியின் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ஹைதர்அலி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 110 போர்வெல் லாரிகள் உள்ளன. போர்வெல் அமைக்கும் போது, ஒரு மணி நேரத்துக்கு, 100 லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலையேற்றத்தால், போர்வெல் அமைக்கும் செலவு அதிகரிக்கிறது. எனவே, டீசல், பெட்ரோல் விலையை, இரண்டு, மூன்று மாதத்துக்கு, ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். டீசல் விலை ஏற்றத்தால், போர்வெல் அமைக்கும் விலையும் அதிகரித்துள்ளதால், விலை ஏற்றத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் தாஸ், பொருளாளர் செல்வராஜ், தர்மபுரி மாவட்ட செயலாளர் பழனிவேல் உட்பட, இரண்டு மாவட்டங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement