Advertisement

நாளை விநாயகர் சதுர்த்தி: கெடுபிடியால் சிலைகள் விற்பனை மந்தம்

ஓசூர்: நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், போலீஸ் கெடுபிடியால், சிலைகள் விற்பனை மந்தமாக உள்ளது.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், மும்பைக்கு நிகராக, பலவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று முதல், பத்து நாட்கள் வரை, பூஜை செய்து, நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் இந்து அமைப்புகள், மக்கள் சார்பில், நகரின் பல இடங்களில் விநாயகர் சிலைகள் நாளை பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இதையொட்டி, இன்று வரை, விநாயகர் சிலைகள் அதிகமாக விற்பனை செய்யப்படும் என்பதால், அதை எதிர்பார்த்து வியாபாரிகள் பலர், களிமண், கிழங்கு மாவில் தயார் செய்யப்பட்ட, ஒரு அடி முதல், பத்து அடி உயரமுள்ள, பல வண்ண கலர்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து, விற்பனைக்கு வைத்துள்ளனர். ஆனால், போலீசார் மற்றும் அதிகாரிகளின் கெடுபிடியால், ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சிலைகள் விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என, வியாபாரிகள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement