Advertisement

விநாயகர் சிலை வைக்க மீண்டும் கெடுபிடி: இந்து முன்னணியினர் கொதிப்பு

ஈரோடு: விநாயகர் சிலை வைக்க அனுமதி அளித்தல் தொடர்பாக, மீண்டும் கெடுபிடி செய்வதாக, இந்து முன்னணியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணியினர், ஈரோட்டில், 280க்கும் மேற்பட்ட சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளனர். சிலை வைக்க, குறிப்பிட்ட நேரத்துக்கு பின், அனுமதி கேட்டு வரும் விண்ணப்பங்கள், நிராகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அனுமதி கொடுப்பது தொடர்பாக, முன்னுக்கு பின் முரணான தகவல்களை, நிர்வாக தரப்பு அளிப்பதாக, இந்து முன்னணியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: விநாயகர் சிலை வைத்தல் தொடர்பாக ஒற்றை சாளர முறையில் விண்ணப்பித்தால், பரிசீலனை செய்து, அனுமதி வழங்கப்படுமென, மாவட்ட நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு, மாசு கட்டுப்பாடு துறை, மின் வாரியம், உள்ளாட்சி அலுவலகங்களில் தடையின்மை சான்று பெற வேண்டுமென்று தெரிவித்தது. விண்ணப்பம் நிராகரிப்பு, சிலைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே, நிர்வாக தரப்பினரின் குறிக்கோளாக உள்ளது. தடையின்மை சான்று பெற, அலுவலர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற காலதாமதம் ஏற்படும். ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியாது. தனித்தனியே தடையின்மை தர வேண்டுமென்று, முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால், விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து தந்திருப்போம். இதை கண்டித்து, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நாளை (இன்று), உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement