Advertisement

வேளாண் கல்லூரி மாணவிக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், வேளாண் கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில் படிக்கும் மாணவி கிரிஜாவிற்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், துணை புரிந்த உதவி பேராசிரியைகள் புனிதா, மைதிலி, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் மன ரீதியாக கொடுக்கும் தொல்லைகளை கண்டித்தும், மாணவிக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், திருவண்ணாமலையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சங்கத் தலைவர் முத்துச்செல்வம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் செல்வி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement