Advertisement

சில்மிஷ போலீஸ்காரர் அதிரடி, 'சஸ்பெண்ட்'

அரியலூர்: ஓடும் பஸ்சில், பெண்களிடம் சில்மிஷம் செய்ததுடன், தட்டிக் கேட்ட கண்டக்டரை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளான்.

அரியலூர் மாவட்டம், கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவன் மணிகண்டன், 45; ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறான். இவன், நேற்று முன்தினம், மீன் சுருட்டியில் இருந்து, திருச்சிக்கு, அரசு பஸ்சில் சென்றான்.மது போதையில் இருந்த மணிகண்டன், பஸ்சில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டான். பயணியர் புகார் செய்ததால், கண்டக்டர் ராஜ்குமார், மணிகண்டனை கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கண்டக்டரை சரமாரியாக தாக்கினான்.ஜெயங்கொண்டம் போலீசில், கண்டக்டர் ராஜ்குமார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், வழக்கு பதிந்து விசாரிக்கிறார். மணிகண்டனை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., செல்வராஜ் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Darmavan - Chennai,இந்தியா

    இவனை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

  • kundalakesi - VANCOUVER,கனடா

    அதென்ன போலீசுன்னா ஒஸ்தியா, சஸ்பேண்ட் பண்ணி அப்புறம் சேத்துக்கிறாங்க

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது... வேலியை தீ வைத்து கொளுத்தவேண்டியதுதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement