Advertisement

கே.எஸ்.சி., அணி வீரர்களுக்கு பாராட்டு

திருப்பூர்:கபடி போட்டியில், வெற்றி பெற்ற கே.எஸ்.சி.,அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கபடி போட்டி, நஞ்சப்பா பள்ளியில் சமீபத்தில் நடந்தது. இதில், 14 வயது பிரிவு இறுதி போட்டியில், கே.எஸ்., அரசு மேல்நிலைப்பள்ளி அணி, ஆனுார் வித்யாலயா பள்ளி அணியை, 40-10 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.பள்ளிக்கு வெற்றியை தேடித்தந்த கார்த்தி
கேயன், சரவணன், முகமது ஹசன், ஜாக்கேஸ், இலக்கியன், முகமதுசுைஹன், மணிகண்டன், ஸ்ரீ ராம், யாஷீர், மோகன், முகமது உவைஷ் ஆகியோரை, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா, உடற்கல்வி இயக்குனர் லாரன்ஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement