Advertisement

மாவட்ட சதுரங்க போட்டி பிளாட்டோஸ் பள்ளி அசத்தல்

திருப்பூர்:மாவட்ட சதுரங்க போட்டியில், திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார்.

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள், திருப்பூர், அவிநாசி ரோடு, பிஷப் உபகாரசாமி பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட சதுரங்க போட்டியில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாணவர் சூர்யா பங்கேற்று, 19 வயது பிரிவில் இரண்டா
மிடம் பிடித்தார்.
பயிற்சி மையம் சார்பில் நடந்த, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சூர்யா முதலிடம் பிடித்தார். இதுமட்டுமின்றி, திருப்பூர் லயன்ஸ் கிளப் சார்பில், முருகு பள்ளியில், 3வது மாவட்ட சதுரங்க போட்டியிலும், சூர்யா முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
மாணவரை, பள்ளி நிர்வாகி ஹரி கிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் மீராதேவி, உடற்கல்வி ஆசிரியர் சந்தோஷ், சுரேஷ் பாராட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement