Advertisement

டில்லியில் தலைமை காவலர் சுட்டுக்கொலை

புதுடில்லி: டில்லியில் போலீஸ் தலைமை காவலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


டில்லியில் ஜெய்த்பூர் போலீஸ்நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராம் அவதார், நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சொந்த பகையா... சோக கதையா இருக்குதேப்பா...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement