Advertisement

பள்ளி கல்லூரி செய்திகள்

 ஆண்டு விழா

மதுரை லயன்ஸ் மெட்ரிக் பள்ளி 14வது ஆண்டு விழா, மேல்நிலை பள்ளி துவக்க விழா லயன்ஸ் சங்க அறக்கட்டளை தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்றார். முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் நடனகுருநாதன், பள்ளிக் குழு தலைவர் தங்கராஜ், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பாரிபரமேஸ்வரன், ராமசாமி, ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
 பாரதியார் விழா
மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்க பள்ளியில் பாரதியார் நினைவு தினம் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியை மாலா முன்னிலை வகித்தார். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். பாரதி புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகேஸ்வரி பரிசு வழங்கினார். ஆசிரியைகள் மெர்சி, மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement