Advertisement

ஹாக்கி போட்டியில் லேடிடோக் கல்லூரி வெற்றி

மதுரை, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான மாதாந்திர ஹாக்கி போட்டி நடந்தது.

லேடிடோக் கல்லுாரி அணியும், பாத்திமா கல்லுாரி அணியும் மோதிய போட்டியில், லேடிடோக் கல்லுாரி அணி 2-1 என்ற கோலில் வென்றது.
அமெரிக்கன் கல்லுாரி அணியும், மாங்குளம் அரசு பள்ளி அணியும் மோதிய போட்டியில், அமெரிக்கன் கல்லுாரி அணி 2 -1 என்ற கோலில் வென்றது. இறுதி போட்டிகளில் லேடிடோக் கல்லுாரி அணி, அமெரிக்கன் கல்லுாரி அணியை 2-0 என்ற கோலில் வென்றது. ஆண்கள் பிரிவில் அமெரிக்கன் கல்லுாரி அணி, மதுரை விளையாட்டு விடுதி அணியை 2:1 என்ற கோலில் வென்றது.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகுமார், பயிற்சியாளர் முருகன், மாவட்ட ஹாக்கி சங்க
நிர்வாகிகள் ஏ.ஜி.
கண்ணன், வி.கண்ணன், கனகராஜ், செல்லத்துரை, வில்லியம்ஸ் பங்கேற்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement