Advertisement

தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.05காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.77.13 காசுகளாகவும் உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மாற்று எரி பொருள் வாகனத்துக்கு மாற வேண்டும். பொது போக்கு வரத்தை அதிகம் பயன் படுத்த வேண்டும் ஆளுக்கொரு கார் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோலை முயட்சி பண்ணி பார்க்கலாமே

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

   ராமர் பிள்ளை செய்வது மேஜிக்.....மேஜிக் படி 50ml பெட்ரோலில் இருந்து 1litre எடுக்கிறார்.....லாஜிக், சயின்ஸ் படி அவர் செய்வது பக்கா பிராடுத்தனம்.....போய் வலைத்தளங்களில் , அறிவியல் தளங்களில் தேடி படிங்க..... ராமர் பிள்ளை எப்பேர்ப்பட்ட ப்ராடுன்னா , கலைஞரையே ஏமாத்தினவர் ...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  உங்க மனசு நோகக்கூடாது .ஸ்டாலின் உலக தலைவர், அறிவாளி,ஞானி, போதுமா

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  புகழ் முதலில் ஜி.எஸ்.டி கவுன்சில் என்ன என்பதை உங்கள் தி.மு.க வில் யாராவது இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மாநில முதலமைச்சர்கள் அதில் உறுப்பினர்கள் இவர்கள் கூடியே முடிவுசெய்ய முடியும்.

 • GanesanMadurai -

  Demonitaisation மூலம் உங்களுக்கு கோடிகளில் வரிகட்டியபின்பும் நஷ்டமானால் தைரியமாக கோர்ட்டில் வாதாடலாமே நண்பர்களே. எல்லாம் தெரிந்திருக்கிறது என நினைத்து மோதியை எதிர்த்து எதையாவது எழுதுபவர்களுக்கு எவ்வளவு எழுதினாலும் புரியாது நண்பர்களே. முதலில் எண்ணெய் சர்வதேச வர்த்தகத்தை தெரிந்து கொண்டு கருத்து எழுதுங்கள் நண்பர்களே. ஆஷியன் பிரிமியம் (மார்கெட் டிமாண்ட்)அடிப்படையில் கட்டாய அதிக விலைக்கு நமக்கு விற்கும் இஸ்லாமிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் சதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே. Western Texas, Brent மற்றும் Dubai/Oman என 3 வகை எண்ணெய் ரகங்களில் நமக்கு அவர்கள் கொடுப்பது 3வது ரகமான Dubai/Oman ரகமே. மற்ற இரண்டு ரகங்களையும் ரூ69 வில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு விற்கும் இஸ்லாமிய எண்ணெய் வர்த்தக நாடுகள் நமக்கு மட்டும் ரூ76ல் கட்டாயப்படுத்தி 3வது ரகத்தை விற்பதன் நோக்கம் ஏன்ன? உள்குத்து உண்மை இதுதான். நணபர்களே இக்கட்டான இந்நேரத்தில் நாம் நமது அரசுக்கு எதிராக செயல்படுவது நமது அரசியல் எதிரிகளை பலப்படுத்தும். ராகுல் தூபாய் செல்லும்போது எண்ணெய் விலையை குறைக்க கேட்பாரெனில் எனது ஆதரவு அவருக்கே. பல வருடமாக நான் வளைகுடா நாட்டில் வசிப்பதால் நான் இதை எழுதுகிறேன். ஒத்துக் கொள்வது அல்லது மறுப்பது உங்கள் விருப்பம். பொதுவாக மோதி அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்யும் பொழுது எல்லா உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் உண்மையை மறைத்து எழுதும் போக்கு தற்போது அதிகம் உள்ளது. வளைகுடா நாடுகளில் பத்திரிகைகளில் மோதிக்கு எதிரான அரசில் பிரசாரத்தை முன்னிட்டு நமது நக்ஸல் இடதுசாரி மற்றும் கான்கிரஸ் லாபியின் பணம் புழஙகுவது மிகவும் கண்கூடு. இந்த நெடிய எனது பதில் மூலம் நீங்கள் உண்மயை பரிந்து கொண்டால் சரி. மறுப்பதோ என்னை கிண்டல் செய்து எழுதுவதோ உங்கள் உரிமை. முதலில் உங்கள் வரியில் பெரும்பான்மை எங்கு செல்கிறது என அறிந்து அதற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தவும் நண்பர்களே. நன்றி.

  • Being Justice - chennai

   ஐயோ பாவம் வெய்யில்ல அதிகம் போகாதீங்க. ஒன்னும் பயப்பட வேணாம். எல்லாம் சரியாகிடும்.

  • Sudhakar Subramaniam - chennai

   120 % பெட்ரோலுக்கு வரி விதிக்கும் ஒரே நாடு இந்தியாதான் .... 81 ரூபாய் பெட்ரோல் விலையில் 44 ரூபாய் வரி ... இதில் 14 ரூபாய் மத்திய அரசுக்கும் 30 ரூபாய் மாநில அரசுக்கும் போகிறது. காலம் காலமாய் எல்லா அரசுகளும் நம்மை ஏமாற்றி வருகின்றன .....

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  கண்ணு முன்னாடி தமிழக அரசு டாஸ்மாக்ல ஒரு நாளைக்கு லட்சக்கணக்குல கொள்ளை நடக்குது. ஒரு குவார்ட்டருக்கு அஞ்சு ரூவா, ஆஃப்க்கு பத்து ரூவா ,பீருக்கு பத்து ரூவா ஃபுல்லுக்கு இருபது ரூபா கமிஷன் கொடுத்து தான் சரக்கு வாங்குறானுங்க. ஒரு பயலும் எந்த கேள்வியும் கேக்குறது இல்லை. வாங்கி குடிச்சுட்டு போய்க்கிட்டே இருக்காணுங்க. பெட்ரோலுக்கு பந்த் பண்றானுங்களாம். பெட்ரோலுக்கு கொடுக்கற காசாவது நாட்டுக்கு பிரயோஜனப்படுது. பாட்டிலுக்கு மேல நீ கொடுக்கற காசு யாருக்கு போகுது? இதையெல்லாம் என்னிக்காவது யோசிச்சு பாத்தானுங்களா? அது சரி, அந்த அளவுக்கு யோசிக்கற அறிவு இருந்தா திருட்டு திராவிடம் எப்பவோ காணாம போயிருக்கும்

 • R Sanjay - Chennai,இந்தியா

  தமிழிசை 2013 கூறியது இதோ உங்கள் பார்வைக்கு:- டீசல்விலை திடுக்கிட வைக்குதாம்.. பெட்ரோல் விலை பயம்முறுத்துகிறதாம்.. கேஸ்விலை கவலை கொள்ளவைக்கிறதாம்... மண்ணென்னெய் விலை மரணஅடி கொடுக்கிறதாம்

 • GanesanMadurai -

  ஆஷியன் பிரிமியம் (மார்கெட் டிமாண்ட்)அடிப்படையில் கட்டாயம் அதிக விலைக்கு நமக்கு விற்கும் இஸ்லாமிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் சதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. Western Texas, Brent மற்றும் Dubai/Oman என 3 வகை எண்ணெய் ரகங்களில் நமக்கு அவர்கள் கொடுப்பது 3வது ரகமான Dubai/Oman ரகமே. மற்ற இரண்டு ரகங்களையும் ரூ69 வில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு விற்கும் இஸ்லாமிய எண்ணெய் வர்த்தக நாடுகள் நமக்கு மட்டும் ரூ76ல் கட்டாயபபடுத்தி 3ரகத்தை விற்பதன் நோக்கம் ஏன்ன? உள்குத்து உண்மை இதுதான். நணபர்களே இக்கட்டான இந்நேரத்தில் நாம் நமது அரசுக்கு எதிராக செயல்படுவது நமது அரசியல் எதிரிகளை பலப்படுத்தும். ராகுல் தூபாய் செல்லும்போது தனது எண்ணெய் விலையை குறைக்க கேட்பாரெனில் எனது ஆதரவு அவருக்கே.

 • GanesanMadurai -

  GST க்குள் பெட்ரோல் வர்த்தகத்தை கொண்டுவர மாநில அரசுகள் ஏன் மறுக்கிறன? மத்திய அரசு எல்லா செலவுகளையும் ஏற்ற பின்னரும் வெறும் 13% மட்டுமே எண்ணெய் வர்த்தகத்தில் பெறும்போது செலவு ஏதுவும் இல்லாமல் வெறும் வரி வருமானம் மட்டுமே ஈட்டும் மாநில அரசுகள் தங்கள் வரி விதிப்பை ஏன் குறைக்க கூடாது? மக்களின் நலனில் மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை வெறும் மாநில சுயாட்சி மட்டுமே குறி என்பதுதான் காரணம். மாநில பிரதிநிதிகள் ஏன் தங்கள் அரசுகளை கட்டாயப்படுத்தி வரி விதிப்பை குறைக்க வைத்து பெட்ரோல் வர்த்தக விலையை குறைக்க கூடாது? மனமில்லையா?

 • GanesanMadurai -

  As received Ramesh Vaghani: Here are petrol prices of some countries in 2018 🇮🇳 India =80.22 🇨🇳 China =80.90 🇲🇦 Morocco=81.19 🇨🇦Canada=81.68 🇨🇺Cuba= 86.15 🇯🇲Jamaica=86.86 🇨🇱Chile =88.63 🇯🇵Japan=89.31 🇹🇷Turkey=91.95 🇵🇱Poland=94.36 🇷🇴Romania=98.47 🇭🇺Hungary=99.27 🇷🇸Serbia=101.57 🇦🇹Austria=101.59 🇲🇦Mauritius=102.85 🇪🇸Spain=106.16 🇺🇾Uruguay=110.06 🇳🇿 New Zealand=110.90 🇨🇭Switzerland=110.98 🇸🇬Singapore=111.62 🇮🇪Ireland=114.58 🇩🇪Germany=115.46 🇬🇧UK=116.34 🇧🇪Belgium=118.83 🇫🇮Finland=124.44 🇫🇷France=125.25 🇸🇪Sweden=126.47 🇵🇹Portugal=126.53 🇮🇱Israel=127.43 🇮🇹Italy=128.77 🇬🇷Greece=130.70 🇲🇦Monaco=131.74 🇩🇰Denmark= 131.99 🇳🇱Netherlands= 133.50 🇳🇴Norway=139.85 🇭🇰Hong Kong= 144.23 🇮🇸Iceland =144.52 They are in Equivalent of INR. Those who are making so much noise please note .They all import petrol like us .& Their per capita consumption is more dn us. " Please Note all PETROL-DRINKER" None of them want to through away their hard working PMs for cost of petrol. "Ask not what your Country can do for you, ask what you can do for your Country". ~John F. Kennedy 🇮🇳 जय हिंद 🇮🇳

  • JOY - Chennai

   முட்டு கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்கு

  • R Sanjay - Chennai

   (Petrol/Diesal/ Dollar Price Delhi, India) 2004 = Petrol 33.71Rs Dollar $36, 2009 = Petrol 40.62Rs Dollar $58, 2014 = Petrol 71.41Rs Dollar $107, 2018 = Petrol 80.73Rs Dollar $71. பிஜேபியின் பாசிச ஆட்சி ஒழிக.

 • Saravanan - Chennai,இந்தியா

  ஜீ ஸ் டி கீழ எப்போ இதை கொண்டு வருவீங்க னு சொல்லுங்க... அன்னைக்கி காலைல பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பீச்சு ல உண்ணா விரதம் இருக்கணும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மத்திய அரசே வரியைக் குறைத்தாலும் மாநில அரசுகள் தான் பெரும் பாதிப்புக்குள்ளாகும். ஏனெனில் மத்திய வரிவருவாயில் மாநிலத்தின் பங்காகவும் திட்டச்செலவுகளாகவும் எழுபது சதவீதம் மாநிலங்களுக்கே போகிறது.அது பாதிக்கப்பட்டால் மாநில அரசுகளும்  செயலிழக்கும் . அதனால்தான் ஜி எஸ் டிக்குள் கொண்டுவருவதை எந்த மாநிலமும் விரும்பவில்லை. போராடும் எதிர்க்கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள  மாநில அரசுகளை ஜி எஸ் டிக்குள் கொண்டுவரக் கோர வைக்கட்டும்   பார்க்கலாம்.போலி போராட்டவாதிகளை ஒதுக்கித்தள்ளுங்கள்.

  • R Sanjay - Chennai,இந்தியா

   நீங்க தான் இந்தியாவில் 20 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி நடக்கிறது என்று பெருமைக்கு மாடுமேய்ப்பவர்களாயிற்றே பிஜேபி ஆளும் மாநிலங்களில் இருந்து ஒப்புதல் வாங்கி மாற்றமாநிலங்களில் எதிர்க்கட்சியை மிரட்டி பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டீகுள் ஏன் கொண்டு வர தயங்குகிறீர்கள்.?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   19 மாநிலங்களில் பிஜேபி அரசு தான். கவனமாக அதை தவிர்த்து எதிர்க்கட்சிகள் பெட்ரோலை ஜிஎச்டி க்குள் கொண்டு வர வேண்டுமாம். மாநில அரசை கேட்டா பிற பொருட்களை ஜிஎச்டி யில் கொண்டு வந்தார்கள்? மத்தியில் ஆளும் கட்சியின் கீழ் இயங்கும் மாநில அரசுகளை முதலில் செய்ய சொல்வார்களா? மாட்டார்கள். இந்தியாவின் மூலையில் இருந்துகொண்டு எதிர்க்க கட்சி அரசுகளுக்கு ஆலோசனை கட்டளை எல்லாம் பிறப்பிக்கிறார்கள்.

 • S MURALIDHARAN - delhi,இந்தியா

  அரசாங்க ஊழியர்க்கு ஏன் என்னும் DA ஏறவில்லை

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நேற்று மட்டுமே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு சதவிகிதம் வீழ்ச்சி. க்ரூட் விலையும் உயர்ந்துள்ளது. இவ்ளோ நடந்தும் இன்றைய பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை. சர்வதேச நிலவரப்படி இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யும் வேலை சுத்த ஹம்பக்... இதுக்கு மேல எழுதுனா ஆன்டி இன்டியன்னு திட்டு வாங்கனும்.... ஏன் வம்பு...

 • nicolethomson - bengalooru,இந்தியா

  எதனால் இப்படி அதிகரித்து கொண்டே செல்லுகிறது?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உயர் நடுத்தர வகுப்பினரின் கோரிக்கைக்காக பெட்ரோல் வரிகளைக் குறைத்தால் அது வறியவர்களின் மீது வேறு வகை வரிச்சுமையாக விடியும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரிபோட்டால் அது மறைமுகமாக சுற்றிவளைத்து ஏழைகளின் தலையிலேயே விழும் .வரியைக் குறைத்து வேறு வரி போடாவிட்டால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு திட்டச்செலவுகளைக் குறைக்கவேண்டியிருக்கும் ..அது புதிய வேலைவாய்ப்புகளை கெடுக்கும் மேலும் ஏற்கனவே இருக்கும் வேலைவாய்ப்புக்கும் பணப்புழக்கத்துக்குமேகூட வேட்டு வைக்கும் . மக்களின் ஒத்துழைப்பின்றி எந்த மாற்றமும் வராது . இறக்குமதிப்பொருட்களின் பயன்பாட்டை மக்களே குறைக்கவேண்டும் இறக்குமதி குறைந்தால்தான் அந்நிய செலாவணி மீளும் அது பொருளாதரத்தை வலுப்படுத்தும் .அனாவசியமாக மாணவர்களுக்கு சிறுவர்களுக்கும் டூ வீலர் மின்னணு சாதனங்களை வாங்கித் தருவதையாவது பெற்றோர்கள் நிறுத்தவேண்டும் .இயன்றவரை உங்கள் அருகில் உற்பத்தியாகும் பொருட்களையே (விலை சற்று கூடுதலாக இருந்தாலும் )வாங்குங்கள் .போக்குவரத்தும் டீசல் பயன்பாடும் குறையும் ஓட்ஸ் ஹாலிக்ஸ கெல்லாக்ஸ் போன்ற அந்நிய உணவுகளை தவிருங்கள் .நமது நாட்டு உணவுகளையே உண்ணுவது நமது ஆரோக்கியத்திற்கும் நாட்டின் ஆரோக்கியத்திற்கும் நல்லது அமெரிக்காவுக்கு அதுதான் பாடம் கற்பிக்கும்

  • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

   வந்துட்டாரு பொருளாதார மேதை.

  • Vasanth - Chennai,இந்தியா

   ஆரூர் ரங், மக்களின் வரிப்பணம் என்பது சாலை வசதி, மின்வசதி, உறிய கல்வி, மருத்துவம், கழிவு நீர் மேலாண்மை, etc ...போன்றவற்றிற்கு மடடுமே பயன்பட வேண்டும். இங்கு வரி ஏய்ப்பு நிலை மாறி வரி புடுங்குதல் நடக்கின்றது. முறையற்ற வரி ....சம்பளம் வாங்கும் போது வரி, பொருள் வாங்கும் போதும் வரி, நாட்டை தூய்மை படுத்த வரி, வாகனம் வாங்கும் போதும் வரி, சாலை போட வரி, etc ...இன்னும் நிறைய வரிகளை கொடுக்கும் மக்களை சொந்த வாகனங்களை பயன்படுத்தக்கூடாது, விரும்புவதை சாப்பிட வேண்டாம் என்கிறீர்களே. அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ சொகுசாக வசதிகளை அனுபவிப்பது மட்டும் சரியா? இதில் சுற்று பயணம், மணிமண்டபம், சிலை அனைத்தும் அதே வரி பணம். சும்மா அயல் நாடுகளின் மீது பலி போடாதீர்கள்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இதனைப்பற்றிய இன்றைய தினமலர் கட்டுரை ( கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை அதிர வைக்கும் அமெரிக்க அரசியல் விளையாட்டு) சூப்பர் இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வின் சூத்திரதாரி அமெரிக்கா . இதனால் தனக்கு நிரந்தர பலன் கிடைக்குமென நம்புகிறது. .ஆனால் எண்ணெய் வணிகம் பொன்முட்டையிட்டும் வாத்து என்பது புரியட்டும் நுகர்வு நாடுகள் பாதிக்கப்பட்டால் பயங்கரவாதமே உருவாகி அமெரிக்காவை அழித்துவிடும்

  • பிசெபியை அடியோடு வெறுக்கும் ஒன் ஆப் இந்தியன் - அகமதாபாத் டீக்கடை அருகில்,இந்தியா

   பயங்கரவாதமே உருவாகி அமெரிக்காவை அழித்துவிடும்/ ஏம்ப்பா நேசா.கச்சா என்னை மேட்டர் இல்ல. எல்லா மேட்டர்கள்லயும் தீவிரவாதம் வளர தூண்டுகோலாக, வளர்த்துவிட்ட பெருமை அமெரிக்காவை தான் சேரும் என்பதை இப்போதாவது நம்பு.

 • ஆப்பு -

  அச்சே தின் ஆத்தா ஹைன்...பெட்ரோல் 100 ஐ தாண்டும் ஹை...இந்தியா எங்கள் கையில் ஹைன்..பெட்ரோல் மீது வரி குறைப்பு நஹி ஹைன்...மக்கள் மகிழ்ச்சி ஹைன்..இந்தியா முழுவதும் பா.ஜ ஆட்சி ஹைன்...77 கோடி மக்கள் பயன் பெறுவார் ஹைன்...

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  கடந்த ஒரு வாரத்துல பெட்ரோல் விலை நாலு ரூபா ஏறி இருக்குது....ஆனா கச்சா என்னை விலை தொடர்ச்சியாக எழுபது டாலருக்கு உள்ளாக தான் இருக்கிறது...........பெட்ரோல் விலை திடீரென்று இந்த மாதத்தில் தொண்ணூறு ரூபாய் போனாலும் ஆச்சரிய பட முடியாது..............டாலரில் வர்த்தகம் செய்வதால் இந்த விலை ஏற்றம் என்பது வடிகட்டிய பொய்....நாம ஈரானிடம் இருந்து தான் அதிக பட்சம் இறக்குமதி செய்கிறோம்...ஈரானிடம் நாம் ரூபாயில் தான் வர்த்தகம் செய்கிறோம்...அமேரிக்கா டாலரை வலுவாக்க ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று இந்தியாவை வலியுறுத்துகிறது... இந்தியாவை மட்டும் அல்ல பிற நாடுகளையும்.......

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   சரியா சொன்னீங்க சாமி.... இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் நம்ம அந்நியன்(...அதான் ரங்கிடு+தேசநாஷ்) மாதிரி ஆளுங்க பதில் சொல்லாமல் காது குடைஞ்சிகிட்டு பிசியா இருப்பாங்க..

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   , நாம் இன்னும் இரானிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லை , அமெரிக்கா அதற்கு தடை விதித்திருக்கிறது , இந்தியாவிற்கு விலக்களிக்க பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். முழுமையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள முடியாது என்று தான் மாற்று வழிகளை யோசிக்கிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement