Advertisement

40 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுங்கள்

மதுரை, மதுரை மாவட்ட தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் குறை தீர்க்கும்
கூட்டம் நடந்தது.திருப்பரங்குன்றத்தில் சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 40 ஆண்டுகாலம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. இந்த ஆண்டாவது நிறைவேற்ற வேண்டும் என விவ
சாயிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கு தாசில்தார் சுரேஷ் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன்குமார், பணி ஆய்வாளர் வரதமுனீஸ்
வரன், வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி அலுவலர் அழகேசன் கலந்து
கொண்டனர்.
விவசாயிகள் பாண்டியன், ஜெயக்குமார், சிவராமன், அண்ணாதுரை, பாலகிருஷ்ணன், செல்லக்
கண்ணு ஆகியோர்
கோரிக்கைகள் குறித்து பேசினர்.
உசிலம்பட்டி
தாசில்தார் நவநீத
கிருஷ்ணன் தலைமையில்
நடந்த கூட்டத்தில் 58 கிராம கால்வாயில்
தண்ணீர் திறந்து வெற்றி
கரமாக நடந்து வரும் சோதனை ஓட்டத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்து பாசன சங்க விவசாயி
களுக்கு இனிப்பு
வழங்கினர்.
பாசன கண்மாய் ஆக்கிர
மிப்புகளை அகற்றவும், உசிலம்பட்டி கண்மாயில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தினர்.
58 கிராம கால்வாய்
திட்டத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கண்மாய் விடுபட்டதை சேர்க்க வேண்டும்.
திருமங்கலம் பிரதான கால்வாயில் கோவிலாங்குளம் பகுதி கண்மாய்
களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றனர்.
மேலுார்
தாசில்தார் சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு அதிகாரிகள்
வராததால் விவசாயிகள்
கூச்சல் போட்டனர். வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்ததை
தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. கீழவளவு, இ.மலம்பட்டி பகுதியில் கால்வாய்கள் சுத்தம் செய்யாமல் தண்ணீர் வரவில்லை. விரிவாக்க கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
தாலுகாவில் 32 கண்மாய்களை துார் வாராமல் முறைகேடாக கணக்கு எழுதி உள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம், கள்ளிக்
குடி தாலுகாக்களில் வருவாய்த்துறை அதிகாரிகள்
ஆய்வு காரணமாக செப்., 18ல் கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement