Advertisement

எம்.எல்.ஏ. திருமணம் மீண்டும் நிறுத்தம்

பவானிசாகர்: பவானிசாகர், எம்.எல்.ஏ., திருமணம், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 42. இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், இன்று திருமணம் நடப்பதாகவும், முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்வதாகவும் இருந்தது. ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண், திடீரென மாயமானதால், திருமண விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும், அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, அ.தி.மு.க.,வினர் தரப்பில், தீவிர பெண் வேட்டை நடந்தது.இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ., தரப்பில் யாரும் வாய் திறக்கவில்லை.திருமணம் நடக்கவுள்ள, பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் தரப்பினர் கூறுகையில், இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  இவளோ நாளா சேர்த்த சொத்துக்கு வாரிசு வேணும்னு நினைக்கிறாரு போல....

 • Janan Janan - Chennai,இந்தியா

  ஒரு கல்யாணம் என்று சொன்னால் அது யாராக இருந்தாலும் வாழ்த்த கற்றுக்கொள்ளுங்கள் ,நிந்திப்பதும் ,ஆலோசனை சொல்லுவதும் சாதாரண நேரத்திலாகட்டும் ,உங்க அரசியலை கொண்டு பொய் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் விடாதீர்கள் ,பெரிய மனம் உள்ளவர்களால் மட்டுமே வாழ்த்த முடியும் ,எதை விதைக்கிறோமோ அதுவே நமக்கு அறுவடையாக கிடைக்கும் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  திருமணதிற்கு ஏதாவது முதிர்கன்னிகள் ( நாற்பது வயசில ) கிடைக்கிறதா பாருங்கள்..

  • Kailash - Chennai,இந்தியா

   //Srinivasan Kannaiya - muscat ,ஓமன்// நிறைய்ய பேர் இருக்கிறார்கள்.... சொத்துக்களோடு குதிரையில் ராஜகுமாரன் போல, உங்களை போல வெளிநாட்டு இளவரசர்கள் வருவார்கள் என்று நினைப்பில் காத்துகொண்டு இருக்கிறார்கள்.... மேட்ரிமோனி வெப் சைட்டில் பாருங்கள் 40 வயதுக்கு மேல் சுமார் நாற்பதாயிரம் பேர் வருவார்கள்...பெற்றோர்களுக்கு பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க துப்பு இல்லை இன்னமும் தேடி கொண்டு இருக்கிறார்கள் சில ஆண்டுகளில் சஷ்டியப்த பூர்த்தி நிகழ்ச்சியும் திருமணமும் ஒன்றாக நடத்திவைப்பார்கள்..

  • சீனி - Bangalore,இந்தியா

   30 + ஓக்கே..... 40ந்னா இன்னும் 5 வருசத்துல Expairy தேதி முடிஞ்சுடும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வயசை ஓட்டியாச்சு... இனி கல்யாணம் தேவையா...

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   தேவை என்பதால் தான் கல்யாணத்துக்கு சம்மதித்து உள்ளார், தேவையா இல்லியா என்பது அவர்கள் முடிவு பண்ண வேண்டிய விஷயம் நீங்களா நானோ அல்ல

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 42. ..இனி நித்தியகல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதான்...

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  காவேரியை திறந்துவிட்டார்... கொள்ளிடம் அணை அடித்துக்கொண்டு போனது… கல்யாணத்திற்கு தேதி கொடுத்தார்… கல்யாணப்பெண் ஓடிப்போனது… எடப்பாடிக்கும் அவருடன் சேர்ந்தவர்களுக்கும் நேரம் சரியில்லையோ …?

  • sivan - Palani,இந்தியா

   சே சே நமக்கு சம்பந்தம் இல்லாதவர்களை பற்றி நாம் ஏன் அவதூறு பேச வேண்டும்? A1 ஜெயலலிதா இருந்த பொழுது முழு மெஜாரிட்டி இருந்தும் மக்களுக்கு என்ன செய்தார் ? எப்போ பார்த்தாலும் எஸ்டேட்டில் பொய் உட்கார்ந்து கொண்டு தோழியுடன் பொழுது போக்கி கொண்டிருந்தர். ஜெயலலிதாவை ஒப்பிடும்போது /... இப்போது ள்ள மந்திரிகளுக்கு முதல்வருக்கு அந்தளவு புத்தி கூர்மை இல்லாமல் இருக்கலாம். .. ஆனால் ராவும் பகலும் மக்களுக்காக வேலை பார்க்கிறார்கள். கல்வித்துறை நன்றாகவே உள்ளது. மற்ற துறைகளிலும் மக்களுக்காக நிறைய யோசித்து யோசித்து செய்கிறார்கள். .. ஊழல் இருக்கிறது... ஏற்கனவே போயசுக்கு கப்பம் கட்டி வேலைக்கு சேர்ந்தவர்கள் ஊழல் செய்யத்தானே செய்வார்கள். அதனால் ஊழல் இருக்கிறது.. ஆனால் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு .. முதல்வரும் அமைச்சர்களும் வேலை பார்ப்பதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். எனவே .. ஜெயலலிதா மரணித்து சசிகலா முதல்வராக முயற்சி செய்து (( தமிழக மக்கள் தப்பியது தம்பிரான் புண்ணியம் Credit goes to ஓ.பி.ஸ் )) கடைசியில் ஆட்சி பழனிசாமி கைக்கு வந்தது ... தமிழக வரலாற்று தவிர்க்கமுடியாத அதிசயம் அதை அதிகம் படிக்காத ஜெயலலிதாவின் அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ... மத்திய அரசின் மேற்பார்வையில் ஓரளவுக்கு குறையில்லாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். .. எனவே... நக்கல் செய்கிறோம்... நையாண்டி செய்கிறோம்.. என்ரு நினைத்துக் கொண்டு அவர்களை பேசிக் கொண்டிராமல் .. மக்களுக்கு என்ன தேவை என்று யோசித்து செயல்படலாம். ரொம்ப கஷ்டப் பட்டு ஊழல் செய்வதை நிறுத்த முயலும் அதிமுக அரசுக்கு ஆதரவு அளிக்கலாம்.

  • narayanan iyer - chennai,இந்தியா

   நல்ல உண்மையான பதிவு .

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

   ஓரளவு நீங்கள் சொல்லுவது உண்மையே... ஆனாலும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை நீக்கி , மக்களுக்கு அரசியல் கட்சிகளின் பேரில் நம்பிக்கை வரச்செய்யலாம்... அதைவிடுத்து அவன் செய்தான் இவன் செய்தான் என்று ஜால்ஜாப்பு சொல்லாமல்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement