Advertisement

ண மதுரையில் மெகா விளம்பர போர்டுகள் மிரட்டுது! இரும்பு தூண்களை அகற்றுமா மாநகராட்சி

மதுரை, மதுரை நகர் முக்கிய ரோடுகள், சந்திப்புகளில் மக்களை மிரட்டும் வகையில் இரும்பு துாண்கள் மற்றும் கம்பிகளில் மெகா விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கான வசதிகளும், தளவாட பொருட்களும் மாநகராட்சியில் இல்லாததால் ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.
நகர் முழுவதும் நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பர போர்டுகள் வைப்பதற்கான இரும்பு துாண்கள் உயரமான கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் தனியாரால் அமைக்கப்
பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுபடி இதில் விளம்பரம் செய்யக்கூடாது.
இந்த விளம்பர
போர்டுக்கான கம்பிகள் 20 அடி - 80 அடி உயரம் வரை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பர நிறுவனங்கள் இதில் அடிக்கடி பிளக்ஸ் பேனர்களை வைத்து விளம்பரப்படுத்துகின்றனர். இதை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் போராடுகின்றனர்.
குறிப்பாக ஆபத்தான வகையில் கம்பிகளில் ஏறி அவற்றை கிழிக்கின்றனர். சில நாட்களில் அதே இடத்தில் வேறு விளம்பரம் வைக்கப்படுகிறது. இது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு அனுமதியற்ற இந்த மெகா விளம்பர போர்டுகளுக்கான இரும்பு துாண்கள் மற்றும் கம்பிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
கம்பிகளை அறுத்தெடுக்கும் வெல்டிங் ெமஷின் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மாநகராட்சியில் இல்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பிரிவினருக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து இதுபோன்ற முறைகேடுகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement