Advertisement

வழுக்கு மர விளையாட்டு தவறி விழுந்தவர் மரணம்

அவிநாசி:அவிநாசி அருகே வழுக்கு மரம் ஏறும் விளையாட்டில், தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் - சாவக்காட்டுப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கடந்த, 4ம் தேதி, வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு நடந்தது. 30 அடி உயரமுள்ள, எண்ணெய் தடவிய வழுக்கு மரத்தில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர், ஏற முயற்சித்தனர்.
பூபதி என்பவரின் மகன், அரங்கசாமி, 25, வழுக்கு மரம் ஏறிய போது, தடுமாறி விழுந்தார். படுகாயமடைந்த அவர், கோவை தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இறந்தார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில், வாலி பர் பலியானது, சாவக்காட்டுப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement