Advertisement

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டையில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மதுபானங்கள் ஏற்றி வந்த லாரி திருப்பி அனுப்பப்பட்டன.


உளுந்துார்பேட்டையில் திருவெண்ணெய்நல்லுார் சாலையில், பச்சையப்பா நகரில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:45 மணிக்கு தி.மு.க., நகர செயலர் டேனியல்ராஜ் தலைமையில் திரண்டு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனால், டாஸ்மாக் கடைக்கு கொண்டு வந்த மதுபானங்கள் மீண்டும் லாரியில் ஏற்றி திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement