Advertisement

போலீஸ் உடல் தகுதி தேர்வு பெண்கள் பிரிவில் 419 பேர் தேர்வு

விழுப்புரம்:விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் காவலர், சிறைத்துறை, தீயணைப்பு தேர்வாகிய பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 419 பேர் மட்டுமே தேர்வாகினர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ், சிறை மற்றும் தீயணைப்பு துறை பணிகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதில் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் தேர்வாகிய 3,343 பேருக்கு உடற் தகுதி தேர்வு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 7 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, ஆண்களுக்கு நடந்த உடற்தகுதி தேர்வில் 1,691 பேர் தகுதி பெற்றனர்.


நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது. ஐ.ஜி., நாகராஜன், டி.ஐ.ஜி., சந்தோஷ்குமார், எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலையில் நடந்த இத்தேர்வில் பங்கேற்ற 529 பேரில் 419 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு வரும் 18 ம் தேதி உடல் திறன் போட்டிகள் நடக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement