Advertisement

தனியார் பள்ளி பஸ் மோதி பெண் பலி: 2 குழந்தைகள் காயம்

ரிஷிவந்தியம்:தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் பெண் இறந்தார். இரு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.


ரிஷவந்தியத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி சகுந்தலா,46; இவர் நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்தார், அவருடன் பக்கத்து வீட்டை சேர்ந்த அய்யனாரின் இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.


அப்போது அரியாந்தக்கா கிராமத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு தியாகதுருகம் நோக்கி வந்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சகுந்தலா மற்றும் இரு குழந்தைகள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த மூவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.


ஆபத்தான நிலையில் இருந்த சகுந்தலா மற்றும் அய்யனாரின் குழந்தை நிரஞ்சன்,5; ஆகியோரை சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சகுந்தலா இறந்தார்.புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement