Advertisement

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தரமின்றி நடப்பதாக கூறி நிறுத்தம்

கடலுார்:கடலுார் சாவடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தரமின்றி நடப்பதாக கூறி பணியை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.


கடலுார் நத்தப்பட்டு, கோண்டூர், கிருஷ்ணா கார்டன், உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிக்காக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த 2015ம் ஆண்டு துவங்கியது.இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் கெடிலம் ஆற்றில் கலக்கும் வகையில் சாவடி ஓடைக்காரன் தெருவில் வடிகால் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


இந்நிலையில், வழக்கம் போல் தொழிலாளர்கள் நேற்று காலை, வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் 15 பேர், 10:30 மணிக்கு வடிகால் பணி நடக்கும் இடத்தில் திரண்டு, பணிகள் தரமின்றி நடப்பதாகவும், இதனால் மீண்டும் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழும் அபாயம் ஏற்படுவதாகவும் கூறி பணியை தடுத்து நிறுத்தனர்.


இதையடுத்து, அப்பகுதி மக்கள், சப் கலெக்டர் சரயுவிடம், செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள், போராட்டத்தை 11:00 மணிக்கு கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement