Advertisement

வழிதவறி வந்த இளம்பெண்: ரயில்வே போலீசார் மீட்பு

விருத்தாசலம்:விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வழிதவறி வந்த இளம்பெண்ணை, ரயில்வே போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.


விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடை 3ல், நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில் 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், அழுது கொண்டிருந்தார். ரயில்வே போலீசார் விசாரித்ததில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் இருந்து சகோதரியுடன் ரயிலில் வந்த அவர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி, வழிதவறி, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் தெரிய வந்தது.


அதைத் தொடர்ந்து, கடலுாரில் உள்ள அவரது உறவினருக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். நேற்று காலை விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்த அவரது உறவினரிடம், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் திருமாவளவன் தலைமையிலான போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement