Advertisement

மது பாட்டில் விற்றவர் கைது

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் டாஸ்மாக் கடை எதிரே மது பாட்டில் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.


சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் நேற்று காலை 10:00 மணியளவில் எறும்பூர் சாலையில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெரியகுப்பம் காலனியைச் சேர்ந்த செல்வம், 39; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 63 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement