Advertisement

2 சிறுமிகள் பலாத்காரம் இரண்டு பேர் கைது

உளுந்துார்பேட்டை:விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடந்த சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கருவேப்பிலைப்பாளையத்தைச்சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மகன் கார்த்திக் 23. இவர், கடந்த 5ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை, துாக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மற்றொரு சம்பவம்


கள்ளக்குறிச்சி அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பாக்கம்பாடி காலனியைச் சேர்ந்த நல்லமுத்து மகன் ராஜேந்திரன்,46; இவர், கடந்த 9 ம் தேதி பகல் 2:00 மணியளவில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை வீட்டில் டிவி பார்க்கலாம் என்று அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். வலி தாங்க முடியாத சிறுமி அழுது கொண்டே சென்று தனது தாயிடம் நடந்த சம்பவங்களை கூறினார்.


இதுகுறித்த புாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement