Advertisement

மணல் திருட்டு ஜே.சி.பி., டிராக்டர் பறிமுதல்

செஞ்சி:செஞ்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட ஜே.சி.பி., டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் நேற்று களையூர் கிராமத்தில் ரோந்து வந்தனர். அப்போது ஆற்றுக்கு அருகே உள்ள காலி இடம் ஒன்றில் ஆற்று மணலை சேமித்து வைத்து ஜே.சி.பி., மூலம் சிலர் டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அனைவரும் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து ஜே.சி.பி., மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செயதனர்.இது குறித்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement