Advertisement

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

விழுப்புரம்:பல்வேறு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட வாலிபர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் மணவாளன்,25; இவர் மீது கோட்டக்குப்பம் போலீசில் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.அதனைத் தொடர்ந்து இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, மணவாளனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சுப்ரமணி உத்தரவிட்டார்.


அதன்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் நேற்று, மணவாளனை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement