Advertisement

கிருஷ்ணா கல்லூரி யில் வகுப்புகள் துவக்க விழா

புதுச்சேரி:மண்ணாடிப்பட்டு கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.


கல்லுாரி தலைவர் குமார் (எ) கிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்தார். புதுச்சேரி பொறியியல் கல்லுாரி மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு துறை பேராசிரியர் ப்ளாரன்ஸ் சுதா, பொறியியல் படிப்பின் முக்கியத்துவம், மாணவர்கள் அறிவுத்திறனை மேம் படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை விளக்கினார்.


கடந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சிறப்பாக பணியாற்றிய கல்லுாரி பேராசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். கல்லுாரி செயலாளர் தரணிதரன், கல்லுாரி முதல்வர் முருகன் சிறப்புரையாற்றினர்.துணை பேராசிரியர் பிரீத்தி வரவேற்றார். துணை முதல்வர் பிரவீன் நன்றி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement