Advertisement

நியமன எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி:புதுச்சேரியில் மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


புதுச்சேரி சட்டசபைக்கு, பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை, நியமன எம்.எல்.ஏ.,க்களாக மத்திய உள்துறை நியமித்தது. அவர்களை, சட்டசபையில், சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.


மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், விசாரணையை செப்., 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து, 'இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட் உத்தர வுக்கு தடை விதிக்கவில்லை என கூறி, 'சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.,க்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனாலும், அவர்களை சட்டசபையில் அனுமதிக்காத நிலையே நீடித்தது.


இந்நிலையில், மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், நிதி மசோதா தாக்கல் செய்ய கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
சுப்ரீம் நெருக்கடி மற்றும் கவர்னரின் நிபந்தனை ஆகியவற்றால், கடந்த ஆக., 1ம் தேதி, நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக கூட்டப்பட்ட சட்டசபை கூட்டத்தில், நியமன எம்.எல்.ஏ.,க்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், செப்., 11ம் தேதி வரை மட்டுமே, இந்த அனுமதி பொருந்தும் என, சபாநாயகர் தெரிவித்தார்.


இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement