Advertisement

கோமாதா கோவிலில் ஆவணி அவிட்டம்

புதுச்சேரி:புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் மற்றும் கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில், சாமவேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.


புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் மற்றும் கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில், சாமவேத உபாகர்மா எனப்படும் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி, நேற்று காலை 10.00 மணிக்கு நடந்தது.கீதாராம சாஸ்திரி தலைமையில் வேதபுரீஸ்வரர் கோவிலிலும், வேதசாம்ராட் ராஜா சாஸ்திரி தலைமையில் கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்திலும், சாமவேதத்தை சேர்ந்த பிராமணர்கள் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.


முன்னதாக, மகா சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாக வாகனம், ரிஷி பூஜை, தர்ப்பணம், கலச பூஜை, ஹோமம் வேதாரம்பம் நடந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement