Advertisement

விழுப்புரம் நாகர் பப்ளிக் பள்ளியில் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

விழுப்புரம்:விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.


விழுப்புரம் நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாவட்ட அளவில் 6 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. போட்டி துவக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் ராஜேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். முதல்வர் மேக்சிமஸ் எச்.ரோஸ் முன்னிலை வகித்தார்.


ஸ்கேட்டிங் அசோசியேஷன் செயலர் உன்னிகிருஷ்ணன், தலைவர் மணிமொழி தலைமையில் பயிற்சியாளர்கள் ராஜி, கார்த்திக், வினாயகம் ஆகியோர் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை தேர்வு செய்தனர்.


இரு பிரிவுகளாக நடந்த போட்டியில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திண்டிவனம், சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முண்டியம்பாக்கம் சர்வீஸ் சாலையில் ரோடு ரேஸ் போட்டியும், ரிங்ரேஸ் போட்டிகள் நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மணிமொழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிர்வாக அலுவலர் ஆஞ்சலின்பிரியா, பி.ஆர்.ஓ., ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement